இனிய தாய் எனைச்சுமந்தாள்
ஈரைந்து மாதங்கள் கருவாக...
நீ என்னை சுமந்தது உயிராக...
உன் தோள் மேலே...
அன்னை மடி அறியவில்லை அதிகம்,
தாய்ப்பாலின் சுவையும் அறியவில்லை...
அறிவு தெரிந்த வரை,
அத்தனையும் நீதான்
என் பருவம் வரும் வரை!
இத்தனை காலம் என்னால்
நீ பட்ட துன்பம் போதும்!
இனிவரும் ஜென்மங்களில் உன் மகனாக அல்ல,
அப்பனாய் தான் வரம் வேண்டும்
அப்பொழுதேனும் உன் கண் கலங்காது
உன்னை காத்திட வேண்டும் தந்தையே...
*- தமிழ் -*

வாழ்த்துக்கள்! அழகு வரிகள் அப்பாவுக்கு, என்னை அழவும் வைக்கிறது
ReplyDeleteஅன்னையின் ஸ்பரிசத்தை விட தந்தையின் அன்பையே அதிகம் அனுபவித்தவள் நான் இன்று அவரை இழந்துவிட்டு தனித்து நிற்கின்றேன்! தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்