Monday, November 19, 2012

நான்...



ஒரு ஆணினதும் 
ஒரு பெண்ணினதும் 
காதல் செடியில்
பூத்த ரோஜா - But...
கறுப்பு ரோஜா!

என் - அம்மாவும் அப்பாவும்
சேர்ந்தே உழைத்த - சில
இரவுகழுக்காக கிடைத்த 
ஊதியம்!

ஒரு ஆண்மையின் வேகத்தில் 
வெளியேற்றப்பட்ட விந்துகளில் - சற்று 
வீரியம் மிக்க ஒரு துளி!

அப்பாவின் வேகம்,
அம்மாவின் உணர்ச்சி
இரண்டிலும் பூத்த
ஒரு அத்திப்பூ!

உலகத்தில்...
இன்னுமொரு மனித நடமாட்டத்திற்கு
இடமுண்டு என்பதால்
இறைவன் அனுப்பிய
இன்னுமொரு 
ஆறறிவு ஜீவன்!

ஒருசில மனித வாய் 
உரல்களில் - சம்பல்
இடிக்கப்படுவதட்காய்...
தேவன் தேர்ந்தெடுத்த
மனிதத் தேங்காய்!

*- தமிழ் -*

Wednesday, November 14, 2012

கற்பு ...


யார் சொன்னது
கன்னி திரை என்று?
கண்களில் தான் உள்ளது!
பார்வையை சுத்தமாக்கி கொள்!

பெண்மையை மாசு படுத்தவே
(சில) ஆண்மையால் கண்டுபிடிக்கப்பட்ட
அணு ஆயுதம்!

ஒருத்தியில் ஒரு முறை மட்டும்
அதுவும் ஒருவனால் மட்டும்
உணரப் படக்கூடிய
உயர்ந்த அசிங்கம்!

இறைவன் மட்டுமே
சாட்ச்சி கூற கூடிய
ஒரே ஒரு உலக வழக்கு!

*- தமிழ் -*

Monday, November 5, 2012

சீதனம்



ஆண்களை சில பெண்களிடம்
விற்ப்பதற்கு தீர்மாணிக்கும்
அதி உயர்ந்த விலை நிர்ணயம்!

முப்பது வயதிலும்
முதிர் வயது கன்னியாய்
அவள் கண்ணீருடன்...
அடுக்களையில் குந்தியிருக்க
காரணமான கதாசிரியம்!

கரும்பு தின்பதற்காய்
சிலருக்கு கொடுக்கப்படும்
கைக்கூலி!

*-தமிழ்-*

Saturday, November 3, 2012

நிலாப் பெண்




உலகமும் சூரியனும்
பங்கு போட்டுக்கொண்ட
ஒற்றை மணைவி!

மாதம் 30 நாளில்
ஒரு நாள் பூமிக்கும் (பொளர்னமி)
ஒரு நாள் சூரியனுக்கும் (அமாவாசை)
பங்கு போகும் பத்தினி!

வாணவீதியிலே
முழு நிர்வாணமாக
பொளர்னமி தினத்தில்
பூமிக்கு பதமளிக்கிறாள்!

சூரியனுடன்
சுத்தமான இருளில்
தனிமையில்
சயனிக்கிறாள்!

இருவருடனும்
ஒரு நாளுக்க்கு மேல்
நில்லாமலே போவதால்
இந்த பெண்ணுக்கு
நி(ல்)லா என்று பேர்!

*- தமிழ் -*