Monday, November 19, 2012

நான்...



ஒரு ஆணினதும் 
ஒரு பெண்ணினதும் 
காதல் செடியில்
பூத்த ரோஜா - But...
கறுப்பு ரோஜா!

என் - அம்மாவும் அப்பாவும்
சேர்ந்தே உழைத்த - சில
இரவுகழுக்காக கிடைத்த 
ஊதியம்!

ஒரு ஆண்மையின் வேகத்தில் 
வெளியேற்றப்பட்ட விந்துகளில் - சற்று 
வீரியம் மிக்க ஒரு துளி!

அப்பாவின் வேகம்,
அம்மாவின் உணர்ச்சி
இரண்டிலும் பூத்த
ஒரு அத்திப்பூ!

உலகத்தில்...
இன்னுமொரு மனித நடமாட்டத்திற்கு
இடமுண்டு என்பதால்
இறைவன் அனுப்பிய
இன்னுமொரு 
ஆறறிவு ஜீவன்!

ஒருசில மனித வாய் 
உரல்களில் - சம்பல்
இடிக்கப்படுவதட்காய்...
தேவன் தேர்ந்தெடுத்த
மனிதத் தேங்காய்!

*- தமிழ் -*

No comments:

Post a Comment