உலகமும் சூரியனும்
பங்கு போட்டுக்கொண்ட
ஒற்றை மணைவி!
மாதம் 30 நாளில்
ஒரு நாள் பூமிக்கும் (பொளர்னமி)
ஒரு நாள் சூரியனுக்கும் (அமாவாசை)
பங்கு போகும் பத்தினி!
வாணவீதியிலே
முழு நிர்வாணமாக
பொளர்னமி தினத்தில்
பூமிக்கு பதமளிக்கிறாள்!
சூரியனுடன்
சுத்தமான இருளில்
தனிமையில்
சயனிக்கிறாள்!
இருவருடனும்
ஒரு நாளுக்க்கு மேல்
நில்லாமலே போவதால்
இந்த பெண்ணுக்கு
நி(ல்)லா என்று பேர்!
*- தமிழ் -*

No comments:
Post a Comment