Saturday, December 28, 2013

ஓ நண்பனே நண்பனே ....



நீ வரைந்த கவிதைகள்,
நின் கனவின் நனவுகள், - எல்லாம்
இன்றென் கைகளில்!
நீ மட்டும் இல்லை - இந்த
நிமிடங்கள் தொல்லை.

மாட்டன் என்று சொன்ன நீயே
மரணத்தை தழுவி விட்டாய்... - நானோ
மனிதர்கள் மத்தியிலே
மறந்துபோய் தேடுகிறேன்,
இன்றளவும் உன்னை.

காதல் செத்த காரணத்தால் - நம்
நட்பும் செத்து போகுமென்று
சத்தியமாய் நினைத்ததில்லை - நீ
செத்துபோன நிமிடம் வரை.

பதினஞ்சு வருஷ நட்பு
பஞ்சாகி போசுங்கிபோச்சு !

பாதி இரவு வேளையில
பக்கத்து படுக்கையில
பாசமிகு தோழன் தேடி
பதறிப்போகும் மனம்,
பக்குவப்படுறதுக்கு
பல மாதங்கள் தேவைப்படுது!

நீங்கா நினைவில்...


முதலில்,
கண்ணை விட்டு போன...
பிறகு,
என்னை விட்டு போன...
இப்ப 
மண்ணை விட்டு போன பிறகும்,
எனக்குள் ஏண்டி 
உன்னை விட்டு போயிருக்க...?

பித்து மனம் இப்பவெல்லாம்,
செத்துபோக நினைக்குதடி...
விட்டிடுவன் என் உசிரை
வீட்டில் சனம் இல்லையெண்டா !

என்னை நம்பி நாலுசிரு 
எதிலையா நிக்கையில,
செத்த உண்ட நினைப்பால 
பித்துக்கொண்டு நானும் செத்தா,
பாவம் இந்த சொந்தங்களை 
பாக்குறது யாரு புள்ளை ?

வாழ்க்கையை இவங்களுக்காய் 
வாழ்ந்துவிட்டு ராத்திரியில் 
வானத்தில நான் பாக்க,
வந்து முகம் காட்டி விடு,
நிலவாக - முழு 
மதியாக.


*- தமிழ் -*

Wednesday, December 11, 2013

அன்புள்ள அப்பாவுக்கு....


இனிய தாய் எனைச்சுமந்தாள் 
ஈரைந்து மாதங்கள் கருவாக...
நீ என்னை சுமந்தது உயிராக...
உன் தோள் மேலே...
அன்னை மடி அறியவில்லை அதிகம்,
தாய்ப்பாலின் சுவையும் அறியவில்லை...
அறிவு தெரிந்த வரை,
அத்தனையும் நீதான்
என் பருவம் வரும் வரை!
இத்தனை காலம் என்னால் 
நீ பட்ட துன்பம் போதும்!
இனிவரும் ஜென்மங்களில் உன் மகனாக அல்ல,
அப்பனாய் தான் வரம் வேண்டும் 
அப்பொழுதேனும் உன் கண் கலங்காது 
உன்னை காத்திட வேண்டும் தந்தையே...

*- தமிழ் -*

நீளும் என் இரவுகள்...


நீளமான இரவுகளில்,
நீங்காத உன் நினைவுகளில்,
நின் விரல் தேடி அலைகிறேன்...
நீ என் தலை கோதும் பொழுதினில்,
நின்மதியாய் உறங்கிடவே...!

*- தமிழ் -*

கை அளவு இதயம்!


கையளவு இதயம் இருந்தாலும் - அதில் 
மலையளவுள்ள - உன் 
நினைவுகள் சுமக்கிறேன் 
சுமையாக அல்ல - பெண்ணே,
சுகமாக!

*- தமிழ் -*