Saturday, December 28, 2013

ஓ நண்பனே நண்பனே ....



நீ வரைந்த கவிதைகள்,
நின் கனவின் நனவுகள், - எல்லாம்
இன்றென் கைகளில்!
நீ மட்டும் இல்லை - இந்த
நிமிடங்கள் தொல்லை.

மாட்டன் என்று சொன்ன நீயே
மரணத்தை தழுவி விட்டாய்... - நானோ
மனிதர்கள் மத்தியிலே
மறந்துபோய் தேடுகிறேன்,
இன்றளவும் உன்னை.

காதல் செத்த காரணத்தால் - நம்
நட்பும் செத்து போகுமென்று
சத்தியமாய் நினைத்ததில்லை - நீ
செத்துபோன நிமிடம் வரை.

பதினஞ்சு வருஷ நட்பு
பஞ்சாகி போசுங்கிபோச்சு !

பாதி இரவு வேளையில
பக்கத்து படுக்கையில
பாசமிகு தோழன் தேடி
பதறிப்போகும் மனம்,
பக்குவப்படுறதுக்கு
பல மாதங்கள் தேவைப்படுது!

No comments:

Post a Comment