தினமும்.....
விடிந்தது முதல்
பொழுது சாயும் வரை...
பூமியிடம் வாங்கிய கடனை
திருப்பிக் கொடுக்கிறது வானம்!
உலகில்.....
தனிமைப் படுத்தப்பட்ட
ஒரு சில ஜீவன்களுக்காய்
வானம் சிந்தும் கண்ணீர்!
பூமிக்கு விஜயம் செய்ய முன்பு
இந்திரன் அளவுக்கதிகமாய்
தண்ணீர் குடித்ததன்பின் விளைவு தான் இது!
*- தமிழ் -*
